சினிமா

புதிய திட்டத்தில் சமந்தா: இனி படங்களில் நடிப்பாரா மாட்டாரா?

Summary:

samantha talks about future plan

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்ற முன்னணி நடிகை சமந்தா. விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமான சமந்தா தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 

தனது நடிப்பு திறமை மற்றும் அழகால் ரசிகர்களில் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் நடித்த நான் ஈ, கத்தி போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்பில் மிகவும் பிரபலமானவை.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனா மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிய நிலையிலும் இவர் இன்னும் சினிமாக்களில் நடித்து வருகிறார். 

samantha marriage க்கான பட முடிவு

விநாயகர் சதுர்த்தியான இன்று இவரது நடிப்பில் உருவான சீமராஜா, யு-டார்ன் என இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. இதில் யுடார்ன் படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது குறித்து பட விழாக்களில் கலந்துகொண்ட சமந்தா, தனது எதிர்கால திட்டம் பற்றி கூறியுள்ளார். அப்போது அவரை பேசுகையில் வருங்காலத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தரமான படங்களை அண்ணபூர்னா ஸ்டூடியோ உதவியுடன் தயாரிப்பேன் எனவும், இனி எனது படங்களுக்கு நானே டப்பிங் பேசுவேன் எனவும் கூறினார்.

samantha u turn க்கான பட முடிவு

இவர் இவ்வாறு பேசி இருப்பதன் மூலம் திருமணத்திற்க்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போடும் நடிகைகள் மத்தியில் சமந்தா இன்னும் படங்களில் நடிக்கும் எண்ணத்தில் தான் இருக்கிறார் என்று தெரிய வருகிறது. இதன் மூலம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 


Advertisement