பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
டார்ச்சர் செய்யுறாரே!! நள்ளிரவு 11 மணி! நடிகை சமந்தாவிற்கு பிரபலம் அனுப்பிய மெசேஜ்! வைரலாகும் வாட்ஸ்ஆப் சாட்!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர்.
நடிகை சமந்தா விஜயதேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த குஷி திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. சமந்தாவுக்கு கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோய் ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.மேலும் அவர் தனது உடலை ஃபிட்டாக வைத்து கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா நள்ளிரவு நேரத்தில் ஜிம் ட்ரைனர் தனக்கு மெசேஜ் செய்த ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். அதில், அவரது ஜிம் ட்ரைனர்11 மணிக்கு ஜிம்மில் இருக்க வேண்டும் என மெசேஜ் செய்ய, 'எனக்கு உடல்நலம் சரியில்லை. இன்று ஒருநாள் பிரேக் எடுத்துக் கொள்கிறேன் என சமந்தா கூற அவர் நான் வந்துவிட்டேன், உன்னை காணும் என கேட்டுள்ளார். ஜிம் டிரைனர் லீவ் கொடுக்காமல் டார்ச்சர் செய்கிறார் என வெளிப்படுத்தி சமந்தா அதனை பகிர்ந்துள்ளார்.