சின்னப்பிள்ளை போல துள்ளிக் குதித்து விளையாடிய சமந்தா! அதுவும் யாருடன் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் திருமணத்திற்கு பின்னரும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் கூட இவரது நடிப்பில் வெளிவந்த தி ஃபேமிலி மேன் 2 என்ற வெப்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அவரை பலரும் பாராட்டினர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் சமந்தா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அவர் தற்போது தனது செல்ல நாய்க்குட்டியுடன் பலூனை தூக்கிபோட்டு விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லட்சகணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.