சினிமா

அடேங்கப்பா இவ்வளவா? கிடுகிடுவென தனது சம்பளத்தை உயர்த்திய சமந்தா.! தலை சுற்றிப்போன ரசிகர்கள்!!

Summary:

samantha increase her salary

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவைகாதலித்து வந்ததை தொடர்ந்து பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் கணவருடன் இணைந்தும் நடித்து வருகிறார். 

சமந்தா க்கான பட முடிவு

அதனை தொடர்ந்து சமந்தா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. 

இந்நிலையில் நடிகை சமந்தா ஒரு படத்திற்கு ரூ.2 கோடி வாங்கி வந்தநிலையில் தற்போது தனது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


 


Advertisement