மாமனாருடன் சேர்ந்து சமந்தா செய்த அசத்தலான காரியம்! நடிகை கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகாவிற்கு விடுத்த சவாலை பார்த்தீர்களா!

மாமனாருடன் சேர்ந்து சமந்தா செய்த அசத்தலான காரியம்! நடிகை கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகாவிற்கு விடுத்த சவாலை பார்த்தீர்களா!


samantha-green-india-challenged-to-keerthi-suresh

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வபோது வித்தியாசமாக புதிய முயற்சியை மேற்கொண்டு அதனை மற்றவர்களுக்கு சவாலாக விடுத்து வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் தற்போது அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர்.

அதாவது தெலுங்கானா அமைச்சர் சந்தோஷ் குமார் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று மரம் நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றைத் தொடங்கி வைத்தார். அதனை ஏற்று நடிகர் பிரபாஸ் மரம் நட்டார். பின்னர் நடிகர் நாகார்ஜூனாவும் மரக்கன்று நட்டு அதனை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நடிகை சமந்தாவிற்கு சவால் விட்டிருந்தார்.

 அவரது சவாலை ஏற்று நடிகை சமந்தாவும், நாகர்ஜுனுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு  புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மரம் நடும் க்ரீன் இந்தியா சேலஞ்சை கீர்த்தி சுரேஷ், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஷில்பா ரெட்டி ஆகியோருக்கு விடுத்துள்ளார்.