கவர்ச்சி உடையில் கணவருடன் சேர்ந்து சமந்தா செய்த காரியத்தை பார்த்தீர்களா.! இணையத்தையே கலக்கும் வீடியோ இதோ!!



samantha-dance-with-husband

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சினிமாவில் உச்சத்தில் இருந்த இவர் பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். 

samanthaஎன்னதான் பிரபல நடிகையாக இருந்தாலும் தனது கணவர் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகிறார் நடிகை சமந்தா. இந்நிலையில் சமீபத்தில் சமந்தாவின் மாமனாரும், பிரபல நடிகருமான நாகார்ஜுனாவின் 60வது பிறந்தநாள் ஸ்பெயின் நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், அங்கு சமந்தா தனது கணவனுடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.