சினிமா

விவாகரத்திற்கு பிறகு எல்லை மீறி பரவிய அவதூறுகள்! கடுப்பாகி நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு!!

Summary:

விவாகரத்திற்கு பிறகு எல்லை மீறி பரவிய அவதூறுகள்! கடுப்பாகி நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு!!

விவாகரத்து அறிவிப்பிற்கு பின்  தன்னைக் குறித்து அவதூறு செய்தி பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்தும் அவர் மார்க்கெட் குறையாமல் ஏராளமான திரைப்படங்களிலும், வெப் சீரியல்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிய போவதாக இணையத்தில் செய்திகள் பரவியது.

அதைத் தொடர்ந்து இருவரும் மௌனம் கலைத்து சில வாரங்களுக்கு முன்பு தாங்கள் இருவரும் பிரிவதை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டனர். இந்தநிலையில் விவாகரத்திற்கு காரணம் சமந்தா தகாத உறவு வைத்திருந்தது, கருக்கலைப்பு என பல அவதூறு கருத்துக்கள் பரவி வந்தது. அதெல்லாம் வதந்தி என அவர் விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும் அவரைக் குறித்த அவதூறுகள் குறைந்த பாடில்லை.

அனுமதிக்க மாட்டேன்

இந்நிலையில் சமந்தா தன்னைக் குறித்து அவதூறு செய்திகளை பரப்பிய சில பிரபல யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக அந்த யூட்யூப் சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம். மேலும் சமந்தா வெங்கட்ராவ் என்ற வழக்கறிஞர் தனது திருமண வாழ்க்கை குறித்தும், தான் மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தவறாக பேசியதாகவும் அவர் மீதும்  வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.


Advertisement