விவாகரத்துக்கு பின்.. சமந்தா தனது பிறந்தநாளை யாருடன் கொண்டாடியுள்ளார் பார்த்தீங்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!!

விவாகரத்துக்கு பின்.. சமந்தா தனது பிறந்தநாளை யாருடன் கொண்டாடியுள்ளார் பார்த்தீங்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!!


samantha-celebrate-her-birthday-with-friends

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த அவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சமந்தா பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு  தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சில காரணங்களால் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து அவர் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

samantha

இந்நிலையில் சமந்தா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். விவாகரத்திற்கு பின் சமந்தா தனது பிறந்தநாளை இரவு நெருங்கிய நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.