ஹெல்ப்புக்கு யாருமே வரல; தகாத முறையில் உரசியவருக்கு குத்துவிட்ட சீரியல் நடிகை.!Sakthivel serial actress latest interview

 

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் சக்திவேல் என்ற நெடுந்தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை அஞ்சலி பாஸ்கர். இவர் இத்தொடரின் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

நடிகையின் சமீபத்திய பேட்டி

நடிகை அஞ்சலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் இதுவரை அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்ததில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் படங்களில் வருவது போல தன் வாழ்விலும் ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக கூறியிருக்கிறார். 

இதையும் படிங்க: பிளாக்பஸ்டருக்கு தயாரா? ரீ ரிலீஸாகும் இந்தியன் திரைப்படம்.. இன்று டிரெய்லர் வெளியீடு..!!

Actress anjali baskar

பேருந்தில் சென்ற நடிகை

அவர் கூறியதாவது, "பெண்கள் பேருந்தில் செல்லும் போது சிலர் தவறாக பார்ப்பர் மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபடுவர். நான் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்ததால் பேருந்தில் தான் செல்வேன்.

உரசிய நபருக்கு குத்துவிட்ட நடிகை

அப்போது ஒரு நடுத்தர வயது நபர் என்னிடம் தகாத முறையில் உரசினார். அந்த இடத்தில் என்ன செய்வது என்று என அமைதியாக நிற்காமல், நபருக்கு ஓங்கி ஒரு குத்துவிட்டு திட்டினேன். பின் அந்த நபர் இறங்கி சென்றுவிட்டார். ஆனால் எனக்கு ஆதரவாக பேருந்தில் இருந்த ஒரு பெண்கள் கூட வரவில்லை என நடிகை கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: #Breaking: மாயி திரைப்படத்தின் இயக்குனர் சூரிய பிரகாஷ் காலமானார்; சோகத்தில் திரையுலகினர்.!