சினிமா வீடியோ

நடிகை சாய்பல்லவியா இது.! அங்க இருக்கயாருக்குமே அடையாளம் தெரியலையே.. வைரலாகும் ரகசிய ஷூட்டிங் வீடியோ!!

Summary:

saipallavi secret shooting video viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. ப்ரேமம் படத்தில் இவர் நடித்திருந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தின் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் சாய் பல்லவி. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் நாயகியாக நடித்திருந்தார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தாலும் படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் மாபெரும் வெற்றிபெற்றது.

அதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான NGK படத்திலும் அவர் நாயகியாக நடித்துள்ளார். அப்படமும் எதிர்பார்த்த அளவிற்கான வெற்றியை பெறவில்லை.

இந்தநிலையில் சாய் பல்லவி தற்போது VirataParvam என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக படக்குழு சாய் பல்லவியை வைத்து பொது இடத்தில் ரகசியமாக ஷூட் செய்துள்ளார். அப்பொழுது அவர் மிகவும் சாதாரண உடையில் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்துள்ளார். ஆனால் அங்கு அவரை யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


 


Advertisement