சினிமா

கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி இருந்தால் என்ன தவறு? சாய் பல்லவி ஓபன் டாக்!

Summary:

Sai pallavi talks aboutliving togther life

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படம் மூலம் தமிழ், மலையாளம், தெலுங்கு என ஓவர் நைட்டில் பிரபலமானார் சாய் பல்லவி. தென்னிந்திய சினிமா முழுவதும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். 

தற்போது தனுஷிற்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. சாய் பல்லவி தமிழில் முதலில் நடித்த படம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த கரு. இந்த படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

மாரி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சாய் பல்லவியின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாய் பல்லவியிடம் அவர் காதலிக்கிறாரா என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, நான் எனது கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வருகிறேன். கல்லூரியில் எனது புத்தகங்களை காதலித்தேன், தற்போது சினிமாவை காதலிப்பதாக பதில் கூறினார்.

மேலும் லிவிங் டுகெதர் வாழ்க்கை பற்றி கேட்டதற்கு லிவிங் ரிலேஷனில் எந்த தவறும் இல்லை. அவரவர் விருப்பப்படி வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் எனது வாழ்வில் லிவிங் ரிலேஷனுக்கு இடமில்லை. அது எனக்கு தேவையும் இல்லை. திருமணம் செய்துக் கொண்டு வாழவே விருப்பப்படுகிறேன் என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.


Advertisement