சினிமா

ரோஜா சீரியல் குழு கொண்டாட்டத்துடன் வெளியிட்ட உற்சாகமான செய்தி! வாழ்த்துக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!

Summary:

சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அன

சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அன்று முதல் இன்று வரை சன் டிவி தொடர்களுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 
அவ்வாறு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி  தமிழ் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் ரோஜா.

நாளுக்குநாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்றுகொண்டிருக்கும் இத்தொடர் டிஆர்பியில் முன்னணியில்  வந்து கொண்டுள்ளது. ரோஜா தொடரில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்புசூர்யன் மற்றும் ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரி ஆகியோர் அசத்தலாக நடித்து வருகின்றனர். இந்த தொடருக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ரோஜா சீரியல் இதுவரை 800 எபிசோடை எட்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ரோஜா சீரியல் குழு வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement