சினிமா

ரோஜா சீரியல் நடிகைக்கு இவ்வளவு அழகிய தங்கையா!! அக்கா மாதிரியே இருக்காரே!! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் ரோஜா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் ரோஜா. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இதில் ஹீரோயினாக ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இவர் தெலுங்கில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த அந்தாதி பந்துவய என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

 அதனை தொடர்ந்து பிரியங்கா நல்காரி தெலுங்கிலேயே நா சாமி ரங்கா, ஹைபர், நேனே ராஜு நேனே மந்திரி என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் வெளிவந்த காஞ்சனா 3 திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில்அவர் டிஆர்பி யில் முன்னிலையில் வரும் ரோஜா சீரியலில்  ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமாகியுள்ளார், இந்த நிலையில் பிரியங்கா நல்காரியின் தங்கையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது ரோஜா ஷூட்டிங்கின்போது ஹீரோ அர்ஜுனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement