நடிகை ரோஜா மகனுக்கு கொடுத்த செம காஸ்ட்லியான கிப்ட்! அடேங்கப்பா.. என்னனு பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

நடிகை ரோஜா மகனுக்கு கொடுத்த செம காஸ்ட்லியான கிப்ட்! அடேங்கப்பா.. என்னனு பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!


Roja gifted benz car to his son

தமிழ் சினிமாவில் நடிகர் பிரஷாந்த் உடன் இணைந்து செம்பருத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.

ரோஜா தற்போது சினிமாவில் இருந்து சற்று விலகி அரசியலில் களமிறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நடிகை ரோஜா இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை ரோஜா அண்மையில் தன்னுடைய மகனுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகா தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருதினை பெற்றார்.