BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கடுமையான குடி பழக்கத்திற்கு அடிமையான தனுஷ்.. உண்மையை போட்டுடைத்த ரோபோ சங்கர்.?
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்ட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். இவர் தனது நகைச்சுவை திறமையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்படுகிறார்.

மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரோபோ சங்கர். இவர் முதன் முதலில் வெள்ளித்திரையில் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் திரைப்படத்திலேயே இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரோபோ சங்கர், அவரது குடிபோதையின் மூலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார்.

இது போன்ற நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் 'மாரி' திரைப்படத்தின் போது தனுஷிற்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்ததாகவும் தற்போது குடிப்பதை நிறுத்திவிட்டார் எனவும் கூறி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தனுசை குறித்து ரோபோ சங்கர் இவ்வாறு கூறியது தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.