சினிமா

பிக்பாஸ் மேடையில் கண்ணீர் வடித்த ரித்விகாவின் தந்தை...! ரசிகர்களும் கண்ணீர் வடித்தனர்...!

Summary:

riythvika-dad-speaks-about-biggboss

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தற்சமயம் நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனையும் நடிகர் கமல்காசனே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் சீசன் 1 நிகழ்ச்சியை  நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த  நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியுடன்  நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2 வையும் நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி தற்சமயம் நிறைவடைந்துள்ளது...

பிக்பாஸ் சீசன்1 ன் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட  பிக் பாஸ் சீசன் 2 நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இதன் வெற்றியாளராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனையடுத்து மேடையில் பேசிய ரித்விகாவின் தந்தை மிகவும் மனமுருகி பேசினார். அவரது கண்களில் வழிந்தது ஆனந்த கண்ணீராக இருந்தாலும், ரசிகர்களை கண்கலங்க செய்தது.

மேலும் ரித்விகாவின் தந்தை கமல்ஹாசன் அவர்களை மிகவும் பெருமையாக பேசியது குறிப்பிடத்தக்கது.  ‘கமல் முன்னிலையில் இவ்வளவு மக்களிடம் நின்று பேசுவதற்கு, நான் என்ன புண்ணியம் செய்து என் மகளை பெற்றேனோ தெரியவில்லை ‘ என ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார்.. இதனை ரசிகர்கள் அனைவரும் அவரவர் சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்... 


Advertisement