பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேஷ்மா செய்துள்ள வேலையை பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேஷ்மா செய்துள்ள வேலையை பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ!!


reshma-first-video-after-leaving-bigboss-house

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு எலிமினேட் செய்யபட்டப்பட்டார். அதனை தொடர்ந்து தனது ஓங்கியொலிக்கும் பேச்சாலும், சண்டைகளாலும் பிக்பாஸ் வீட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவந்த போட்டியாளரான வனிதா  வெளியேறினார். 

bigboss

அதனை தொடர்ந்து மூன்றாவதாக மோகன் வைத்யா மற்றும் கடந்த வாரம் பல சர்ச்சைகளை கிளப்பிய மீராமீதுன் ஆகியோர் வெளியேறினர். இதனை தொடர்ந்து மேலும் கவின் மற்றும் சாட்சியின் காதல் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி, பெரும் பிரச்சினைகள் வெடித்தது. இந்நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது.அதனை தொடர்ந்து கடந்த வாரம் ரேஷ்மா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

bigboss

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ரேஷ்மா ரசிகர்களிடம் இருந்து வந்த ஆதரவு மற்றும் அன்பு குறித்தும், தனக்காக நேரம் ஒதுக்கி ஓட்டு போட்டதற்கும், உங்க வீட்டில் ஒருவராய் என்னை பார்த்தததற்காகவும் நன்றி கூறி ரேஷ்மா வீடியோ 
ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.