சினிமா

ரெமோ, சுல்தான் பட இயக்குனருக்கு திருமணம் முடிஞ்சாச்சு! பொண்ணு இவர்தானா? வைரலாகும் புகைப்படம்!

Summary:

ரெமோ மற்றும் சுல்தான் பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கு திருமணம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ரெமோ. இப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன். இவர் ராஜாராணி திரைப்படத்தில் அட்லிக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் தற்போது கார்த்தி மற்றும் ராஷ்மிகா இணைந்து நடிக்கும் சுல்தான் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தநிலையில் பாக்யராஜ் கண்ணன் அவர்களுக்கு ஆஷா என்பவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், நேற்று அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சில திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பல பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement