37 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத அழகுபதுமை சதா! என்னது.. இதுதான் காரணமா??

37 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத அழகுபதுமை சதா! என்னது.. இதுதான் காரணமா??



reason-of-actress-sadha-not-married-anyone

தமிழ் சினிமாவில் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான திரைப்படம் ஜெயம். இதில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் நடிகை சதா. இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர்.

தமிழ் சினிமாவில் இவரது முதல் படமே வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்த அந்நியன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதில் அவர் நடித்த நந்தினி கதாபாத்திரத்துக்கு பல விருதுகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சதாவிற்கு சரியான படங்கள் அமையவில்லை. பின்னர் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

Sadha

37 வயது நிறைந்த அழகிய பதுமையான சதாவிற்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இதுகுறித்து சமீபத்தில் பேசிய அவர், தற்போது வரை எனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் தோன்றியது கிடையாது. மேலும் எனக்கானவரை இன்னும் நான் சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.