சினிமா

வாவ்! அம்மா மீது இவ்வளவு பாசமா! நடிகை ராதிகாவின் மகள் தனது மகளுக்கு வைத்துள்ள பெயரை பார்த்தீர்களா!

Summary:

Rayane nemed her mother name to daughter

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராதிகா. அவர் சமீபகாலமாக பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார்
அதுமட்டுமின்றி நடிகை ராதிகா தற்போது சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் ஒளிபரப்பாகிய சித்தி 2 தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நடிகை ராதிகா கோடீஸ்வரி என்ற கேம் ஷோவையும் தொகுத்து வழங்கிவந்தார்.

நடிகை ராதிகாவுக்கு ரயானே என்ற மகள் உள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவருடன் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.


இந்நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அதனை  தொடர்ந்து ரயானே மிதுனுக்கு கடந்த மாதம் 15ம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரயானே தனது மகளுக்கு ராத்யா மிதுன் என்று பெயர் வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் எனது குழந்தையின் பெயர் என்னை பெற்றவர்களிடம் இருந்து வந்தது. என் மகளும் எனது அம்மா போல அருமையானவளாக வருவாள் என்று பெருமையாக குறிப்பிட்டுள்ளார். 


Advertisement