சினிமா

என்னை அந்தமாதிரி படங்களில் நடிக்க அழைத்தார்கள்! பிரபல நடிகை ஓபன் டாக்!

Summary:

Rathika apte talks about her cinema carrier

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான ஆள் இன் ஆள் அழகு ராஜா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார்.

நிர்வாண வீடியோ, பாத்ரூம் செல்பி என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினாலும் எதையும் கண்டுகொள்ளாமல் சினிமாவில் பயங்கர பிசியாக நடித்துவருகிறார் ராதிகா ஆப்தே. பல்வேறு கவர்ச்சியான வேடங்களில் இவர் நடித்ததால் பாலியல் நகைச்சுவை படங்களில் இவரை நடிக்க வைக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முயற்சித்ததாக சமீபத்தில் கூறியுள்ளார் ராதிகா.

ஒரு துறையில் கால் வைத்தால் அதேதான் வழியென்பது இல்லை ஆனால் அந்த பாதைக்கே என்னை அழைத்தார்கள். ஆனால், அனைத்தையும் நான் தவிர்த்துவிட்டு தற்போது நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துவருவதாக ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.


Advertisement