சினிமா

அடஅட.. நடிகை ராஷ்மிகாவிற்கு இப்படியொரு அதிர்ஷ்டமா! செம மாஸ்தான்.. வெளிவந்த தகவலால் செம ஹேப்பியில் ரசிகர்கள்!

Summary:

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.  அதனை தொடர்ந்து அவர் தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்த நிலையில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ராஷ்மிகா தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் அறிமுகமாகவுள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நாயகியான ராஷ்மிகா அடுத்ததாக அல்லு அர்ஜுன்க்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். இவ்வாறு பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை ராஷ்மிகா அடுத்ததாக மிஷன் மஜ்னு என்ற த்ரில்லர் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார்.

இப்படத்தில் நடிகை ராஷ்மிகா நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆர் எஸ் வி பி மூவிஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மேலும் விருது வென்ற விளம்பரப் பட இயக்குநர் ஷாந்தனு பாக்ஜி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும் 2021 பிப்ரவரி முதல் மிஷன் மஜ்னுவின் படப்பிடிப்புத் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 


Advertisement