பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்கிறாரா இந்த இளைஞர்களின் கனவுக்கன்னி? அவரே கூறிய பதிலால் பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - TamilSpark
TamilSpark Logo

பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்கிறாரா இந்த இளைஞர்களின் கனவுக்கன்னி? அவரே கூறிய பதிலால் பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தனர். இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன்,  ஜோக்கர் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனை தொடர்ந்து அவர் சமுத்திரக்கனியுடன் ஆண் தேவதை எனும் படத்தில் நடித்திருந்தார். மேலும்  தற்போது  சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

அதுமட்டுமின்றி ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

அப்பொழுது பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்ளப் போகிறீர்களா? என ரசிகர்கள் கேட்க, அதற்கு அவர் தெரியவில்லை, பிக்பாஸ் நிகழ்ச்சி உரிமையாளர்கள் தரப்பிலிருந்து இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அப்படித் தொடர்பு கொண்டால் தானே போக முடியும் என பதிலளித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் பிக்பாஸ் தரப்பினர் அழைப்பு விடுத்தால் கண்டிப்பாக ரம்யா பாண்டியன் கலந்து கொள்வார் என பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo