சினிமா

ஜோக்கர் பட நடிகை ரம்யா பாண்டியனா இது? ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே! புகைப்படம்.

Summary:

Ramya pandiyan pullingo get up photos

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களை விட சில சமயங்களில் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் மக்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றுவிடுகிறது. அதுபோன்ற படங்களில் ஒன்றுதான் ஜோக்கர் படம்.

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது. இந்த படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டிருந்தது.

ஜோக்கர் படத்தை அடுத்து இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ஆண் தேவதை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன்பின்னர் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.

சமீபத்தில் கூட பயங்கர மாடர்னாக மாறிய சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ கெட்டப்புக்கு மாறியுள்ள புகைப்படம் அதிகம் வைரலாகி வருகிறது.

இது பற்றி விளக்கம் அளித்துள்ள ரம்யா பாண்டியன், தான் முடியை குறைத்து அந்த கெட்டப்புக்கு மாறவில்லை என்றும், அது வெறும் விக் தான் என்றும் கூறியுள்ளார். அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவில் உள்ளார் ரம்யா பாண்டியன்.


Advertisement