அடஅட.. வேற லெவலில் கெத்து காட்டும் ரம்யா பாண்டியன்! பெருமையோடு அவரது தம்பி கூறியதை பார்த்தீர்களா!!ramya-pandian-bought-new-bmw-car

தமிழ் சினிமாவில் வெளியான ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இப்படங்களில் அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெயரை வாங்கி தரவில்லை. இந்த நிலையில் அவர் புடவையில் வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அவர் பெரும் அளவில் ரீச்சானார்

அதைத்தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்துமுடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அவர் மேலும் பிரபலமானார். அதை தொடர்ந்து அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. அதனைத் தொடர்ந்து அவருக்கு சூர்யா தயாரிப்பில் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் விளம்பரங்களிலும், கடை திறப்பு விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் புதிய BMW கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்து அவரது தம்பி பரசு பாண்டியன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ரம்யா பாண்டியன் அக்கா  உங்களுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது முதல் பிஎம்டபிள்யூ கார். மேலும் அதில் 2011ஆம் ஆண்டு 21G பேருந்தில் 2021-ல் பிஎம்டபிள்யூ GT எனவும் குறிப்பிட்டு பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.