தளபதியின் சூப்பர்ஹிட் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நடிகை ரம்பாவின் மகன்.! தீயாய் பரவும் வீடியோ!!ramba-son-dance-video-viral

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் ரஜினி, கார்த்திக், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

இந்நிலையில் நடிகை ரம்பா கடந்த 2010ஆம் ஆண்டு  கனடாவில் வசித்து வரும் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரம்பா தனது மகள்களை பள்ளியிலிருந்து காரில் அழைத்து வரும்போது கார் விபத்துக்குள்ளானது. அவரது இளைய மகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் உடல் நலம் சரியாகி வீடு திரும்பியுள்ளார். அதனை தொடர்ந்து நடிகை ரம்பா விபத்தின் தாக்கத்தில் இருக்கும் தனது குழந்தைகளை நார்மலான நிலைக்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். இந்நிலையில் ரம்பாவின் மகன் தளபதியின் பீஸ்ட் பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.