சினிமா

நடிகை ரம்பாவிற்கு மூன்றாவது ஆண் குழந்தை பிறந்ததும் சந்தோஷத்தில் குடும்பத்தார்கள் .!

Summary:

ramba-3rdbaby

ரம்பாவின் இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார்.

அவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

ரம்பா மற்றும் அவரின் கணவருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் ரம்பா தனது வாதத்தில் என்னுடைய கணவர் குடும்பம் நடத்துவது எப்புடி என்று சொல்லி சமாதானப்படுத்தி என்னுடன் சேர்த்து வைக்கும் படி கூறியிருந்தார். 

அதன் படி இருவருக்கும் இடையே சமாதானம் பேசி அந்த வழக்கு முடிவு செய்தனர். ரம்பா மற்றும் அவரது கணவர் தங்களது பிரச்சனைகளை பேசி திருத்து கொண்டு சந்தோசமாக வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அவர்களை தனியாக நான் பார்த்துக்கொள்ள முடியாது என்று தான் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். சில நாட்களுக்கு முன் ரம்பாவின் வளைகாப்பு நிகழ்ச்சி கனடாவில் அவரது இல்லத்தில் நடந்தது சமூக வலைத்தளத்தில் பரவியது.

இப்பொழுது ரம்பாவுக்கு 23 - 09 - 2018 ல் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறந்ததில் ராம்பாவும் அவரது கணவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.


Advertisement