சினிமா

ஜீ தமிழ் பிரபலத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? அவரே கூறியே அதிர்ச்சி காரணம்!

Summary:

ramaniyamal priceபிரபல தொலைக்காட்சி சேனல்களில் நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிவரும் சேனல்களில் ஒன்று தான் ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி எனும் தொடர் தமிழ் சேனல்களில் முதல் இடத்தை தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி தொலைக்காட்சிகள் எவ்வளவோ அதனை முந்துவதற்கு போட்டியிடுகின்றது. ஆனாலும் செம்பருத்தி தொடர் தான் முன்னிலையில் இருந்த்துவருகிறது.

  இந்த சேனலில் ஒளிபரப்பான சரிகமப என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரமணியம்மாள். இவரின் திறமையை பாராட்டாத ரசிகர்களே இல்லை என கூறலாம். 63 வயதிலும் ஒருவரால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தியவர் தான் ரமணியம்மாள்.

ramani ammal zee tamil க்கான பட முடிவு

சரிகமப நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்காக விவசாய நிலம் பரிசாக வழங்குவதாக அறிவித்தனர். மேலும் அவருக்கு அளித்த பரிசு தொகை 5 லட்சத்தை தன்னுடைய 7 பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார் ரமணியம்மாள்.

ஆனால் விவசாய நிலம் பற்றி ஜீ தமிழ் சேனல் கூறுகையில், இந்த பரிசை வழங்குவதாக சொன்ன ஸ்பான்சர் நிறுவனம் நடைமுறைப்படி நடந்து கொள்ளவில்லை. அதனால் தான் அதனை வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ரமணியம்மாவிற்கு விவசாய நிலத்தை வாங்கி கொடுக்கும் முழு பொறுப்பு எங்களுடையது என தெரிவித்துள்ளது.


Advertisement