வாவ்.. விஜய் டிவி டார்லிங் ரக்சனா இது! செம க்யூட்டாக அவரது பக்கத்தில் இருப்பது யார் தெரியுமா?? வைரலாகும் கியூட் புகைப்படம்!!

வாவ்.. விஜய் டிவி டார்லிங் ரக்சனா இது! செம க்யூட்டாக அவரது பக்கத்தில் இருப்பது யார் தெரியுமா?? வைரலாகும் கியூட் புகைப்படம்!!


rakshan childhood photo viral

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஜே ரக்சன். அவர் இறுதியாக ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

ரக்சன் சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இரண்டாம் நாயகனாக  அவர் அசத்தலாக நடித்திருந்தார். இந்தநிலையில் ரக்ஷன் திருமணமாகாதவர் என பலரும் எண்ணியிருந்த நிலையில், அவர் அண்மையில் தனது திருமணம் குறித்தும், மனைவியின் புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் தன் அக்காவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ரக்ஷன் குழந்தையில் கொழுக் மொழுக்கென க்யூட்டாக இருப்பதாக கூறிவருகின்றனர்.