தனது ரசிகரையே, ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபல கவர்ச்சி நடிகை.! வெளியான ஷாக் தகவல்!!

தனது ரசிகரையே, ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபல கவர்ச்சி நடிகை.! வெளியான ஷாக் தகவல்!!


rakki savanth secret marriage

பாலிவுட் சினிமாவில், ஏராளமான திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் மற்றும் நடிப்பால் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கும் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தக் கூடியவர். மேலும் இவர் கவர்ச்சிப்புயல் சன்னிலியோனுக்கு போட்டியாக திகழகூடியவர்.

இந்நிலையில் சமீப காலமாக ராக்கி சாவந்த்திற்கு ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளது என்ற தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. மேலும் அவர் மணமகள் கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 

rakki savanth

இந்நிலையில் இதனை உறுதிசெய்து ராக்கி சாவந்த் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், ஒரு பேட்டியின் போது ரித்தேஷ் என்ற ரசிகரை சந்தித்துள்ளதாகவும், பின்னர் வாட்ஸ்அப் மூலம் சேட்டிங் செய்தததை தொடர்ந்து எங்களது நட்பு காதலாக மாறியது பின்னர் திருமணம் செய்து கொண்டோம் என  கூறியுள்ளார்.

மேலும் ரித்தேஷ்  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிகிறார். நான் திருமணம் செய்துகொண்டால் கவர்ச்சி நடனம் ஆட வாய்ப்பு கொடுப்பார்களா என அஞ்சி திருமணம் செய்துகொண்ட தகவலை யாருக்கும் கூறாமல் ரகசியமாய் வைத்திருந்தேன்.மேலும் தானும் இங்கிலாந்து செல்லவிருப்பதாகவும், 2020ம் ஆண்டுதான் குடும்ப வாழ்க்கையை தொடங்கப்போவதாகவும் ராக்கி சாவந்த் தெரிவித்திருக்கிறார்.

View this post on Instagram

Good morning sweetheart Fan’s

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on