
அடேங்கப்பா.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ராஜுவிற்கு கிடைத்த மொத்த பணம் எவ்வளவுனு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கடந்த வாரத்துடன் முடிவடைந்தது.
உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்த 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அவர்களில் பாவனி, நிரூப், அமீர், ராஜு, பிரியங்கா ஆகியோர் மட்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் ராஜு வெற்றியாளர் ஆனார்.
இந்த நிலையில் ராஜுவிற்கு ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டில் 16 வாரங்கள் இருந்த ராஜுவிற்கு ஒரு வாரத்திற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் வீதம் 16 வாரங்களுக்கு ரூ.21 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆக மொத்தம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராஜு ரூ.71 லட்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement