நிலைக்குமா "ஆன்மீக அரசியல்"..? ரஜினியின் முடிவால் ரசிகர்கள் ஏமாற்றம்..rajinikanth-take-decision-for-again-acting-2-movies

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது உறுதி என அறிவித்ததும், உடனடியாக கட்சி தொடங்கி அரசியல் பணிகளில் கவனம் செலுத்துவர் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர்.  

ஆனால் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து அதற்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து உறுப்பினர்கள் சேர்க்கையை மட்டுமே நடத்தினார்.

Latest tamil news

மேலும் 'காலா' திரைப்படம் வெளியானதும் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று நம்பிய ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த படத்தை தொடர்ந்து உடனடியாக இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதித்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கிறார். இன்னும் இரண்டு மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 


இந்த படத்தை முடித்த பின்பு கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் மேலும் 2 படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 

ஏற்கனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிற்க மாட்டேன். அடுத்த சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

Latest tamil news

ஆனால் இதுகுறித்து தற்போது எதுவும் யோசிக்காமல் ரஜினி அடுத்ததாக கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் படையப்பா படத்தின் 2- ஆவது பாகத்தில் நடிக்க ஆலோசித்து வருவதாகவும், இதைதொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இதனால் ரசிகர்கள் மற்றும்  மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிருப்த்தியில் உள்ளனர். இவரின் இந்த முடிவால் ரஜினியின் 'ஆன்மீக அரசியல்' தொடருமா என்ற சந்தேகம் அனைவர்க்கும் வராத தொடங்கியுள்ளது.