கை, கால் உதற பதறியோடிய சூப்பர்ஸ்டார்.. காரணம் இதுதானா?.. பொது இடத்தில் பல்பு வாங்கிய ரஜினிகாந்த்..!!



Rajinikanth Shared his past fearing Scene

 

சினிமாவின் மீதிருந்த ஆசையால் நடத்துனர் பணியை உதறி தள்ளிவிட்டு திரைத்துறையில் இயக்குனர் கே.பாலச்சந்திரன் மூலமாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் ரஜினிகாந்த். இவர் தனது தொடக்கத்தில் பல கஷ்டங்களை தாங்கி பின்னர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். 

பல அவமானங்களை சந்தித்த ரஜினிகாந்த் பின் நாட்களில் தான் எப்படி முன்னேறினேன்? என்று திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசி தகவலையும் பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 179 படங்களில் நடித்துள்ள அவருக்கு பல திரைப்படங்கள் பெரும் வெற்றியில் அமைந்திருக்கின்றன. 

தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர், லால்சலாம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஞானவேல் ஆகியோரிடம் இணைந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

cinema

நடிகர் ரஜினிகாந்த் ஒருமுறை மாறுவேடத்தில் வெளியே சென்றபோது யாரோ ஒருவர் அவரது பின்னாலிருந்து தலைவா தலைவா என கூறியிருக்கிறார். தமிழகத்தில் அன்றைய நாட்களில் ரஜினியை பலரும் தலைவா என அழைத்த நிலையில், தன்னை அடையாளம் கண்டுபிடித்து விட்டார்களோ! என்று பதற்றத்தில் ரஜினி வேகமாக சென்றுள்ளார். 

இருப்பினும் தொடர்ந்து அந்த சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதனால் பதறிப்போன ரஜினிக்கு கை, கால் எல்லாம் உதற ஆரம்பித்த நிலையில், மற்றொரு நபரை கூப்பிட்டதை அவர் அறிந்துகொண்டு தப்பித்தோம் என ஆட்டோவில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை ஏற்கனவே அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.