போடு தகிட தகிட.. ரஜினியின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்?... உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!Rajinikanth Next Movie May Be Direction by KS Ravikumar

ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி, கே.எஸ் ரவிகுமாருடன் சேர்ந்து ஹிட்டடிக்க விரும்புவதாக தெரியவருகிறது.

அண்ணாத்த படம் வெளியாகி வரவேற்பை பெறுவதற்கு முன்னதாகவே, ரஜினியின் அடுத்த படம் யாருடன் என்ற எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது. ஹிட் படங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ரஜினியை தற்போது சூழ்ந்துள்ளது. 

இதனால் 5 க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் சமீப காலங்களில் ரஜினிகாந்திடம் கதை சொல்வதற்கு சென்ற நிலையில், அனைவரிடமும் தனித்தனியாக கதைகளை கேட்டுக்கொண்ட ரஜினி, அவர்கள் ஒரு வரியில் படத்தை சொல்லி, நடிக்க விருப்பம் என்றால் மீது கதை சொல்லலாம் என தெரிவித்துவிட்டதாக தெரியவருகிறது. 

annaatthe

ரஜினி இயக்குனர்களின் செயலால் கதையை தேர்வு செய்வதில் சோர்வடைந்துள்ள நிலையில், தனது நண்பர் ஒருவருக்கும் தொடர்பு கொண்டு அதனை மனஆதங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார். 

கடந்த காலங்களில் வருடத்திற்கு 28 படங்கள் தேர்வு செய்த நிலையில், தற்போது அதனைப்போன்ற வாய்ப்பு அமையவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார். அண்ணாத்த படத்தை விட அடுத்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்க வேண்டும் என்று ரஜினி முனைப்புடன் இருக்கிறார். 

annaatthe

அந்த படத்தை விரைந்து தயார் செய்து வெளியிடவும் விருப்பட்டுள்ள நிலையில், இயக்குனர் கே.எஸ் ரவிகுமாருடன் கைகோர்க்க ரஜினி முடிவு செய்துள்ளதாகவும், கடந்த சில மாதமாக கே.எஸ்.ஆரிடம் ரஜினி தனக்கு கதை கேட்டு இருந்ததாகவும் தெரியவருகிறது. 

இதனால் விரைவில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கே.எஸ்.ஆர் - ரஜினி காம்போவுடன் நல்ல படம் வேண்டும் என ரசிகர்களும் எதிர்பார்த்து ஆரவாரத்துடன் உற்சாகமடைந்துள்ளனர்.