சினிமா

அமெரிக்காவிலிருந்து திரும்பிய நடிகர் ரஜினிக்கு மகள் சொன்ன குட் நியூஸ்! செம ஹேப்பியில் சூப்பர் ஸ்டார்!! என்ன விசேஷம் தெரியுமா?

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருப

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.  

இளைய மகள்  சௌந்தர்யா கடந்த 2010ஆம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சௌந்தர்யா மற்றும் அஸ்வினுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து சௌந்தர்யா தனது மகன் வேத்துடன் தந்தை ரஜினிகாந்த் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில்  சௌந்தர்யா, கடந்த 2019-ம் ஆண்டு தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.  அதனைத் தொடர்ந்து தற்போது சௌந்தர்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சென்னைக்கு திரும்பியவுடன் தனது தந்தைக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியை சௌந்தர்யா கூறியுள்ளாராம். இதனால் அவர்களது ஒட்டுமொத்த குடும்பமே பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement