என்னாது... சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழில் எழுத படிக்க தெரியாதா..? இளைய மகளால் ரஜினிக்கு வந்த சோதனை...! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள், தனது தந்தைக்கு  தமிழ் சரளமாக எழுத தெரியாது என்று கூறியதால் ரசிகர்களுக்கிடையை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா நேற்று ஹூட் ஆப் என்ற செயலியான ,குரல் மூலம் கருத்துகளை பதிவு செய்யும் புதிய செயலியை துவக்கியுள்ளார். இந்த செயலியை தன் தந்தையான ரஜினியே, அவர் சொந்ந குரலில் கருத்துக்களை பதிவு செய்து முதலில் துவக்கி வைத்தார். அதன்பின் இளைய மகள் சவுந்தர்யா இந்நிகழ்ச்சியின் உரையாடலின் போது, தன் தந்தை இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தது பெருமிதம் அடைகிறேன்.

என் தந்தை எனக்கு தகவல் அனுப்பும் போது, குரலில் பதிவிட்டு தான் அனுப்புவார். பிறகு, இதைப் பற்றி எனக்கு யோசனை வந்தது. தமிழில் எழுத தெரியாதவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அவர்கள் தமிழ் எழுதுவதற்க்கு தடுமாறுகிறார்கள். இவர்களின் சிரமங்களை குறைப்பதற்க்காக தான் இந்த ஹீட் ஆப் செயலியை உருவாக்கி மக்களுக்கு பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்றார்.

ரஜினியின் மகள் சவுந்தர்யா, ரசிகர்கள் மத்தியில், தன் தந்தைக்கு தமிழ் தெளிவாக பேசவோ, எழுதவோ தெரியாது என்ற வார்த்தையை கூறியதும், ரசிகர்களிடையே ரஜினியின் மீது எதிர்ப்பு நிலவி வருகிறது. ரஜினியின் படமான "அண்ணாத்த" சமீபத்தில் தியேட்டரில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. தாய் மொழியை எழுத, படிக்க  தெரியாத இவருடை படத்தை யாரும் தியேட்டரில் பார்க்க கூடாது, என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மற்றும் பலரும் பதிவு செய்து வருகின்றனர்.