சினிமா

அண்ணாத்த இயக்குனர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்.! ஏன்? அங்கு என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.!

Summary:

இயக்குனர் சிறுத்தை சிவா வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்.! ஏன்? அங்கு என்ன செய்தார் தெரியுமா??

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து, நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் இறுதியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷும், அவருக்கு ஜோடியாக, ஹீரோயினாக நயன்தாராவும் நடித்திருந்தனர். மேலும் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த இந்த திரைப்படம், வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது.

ஆனாலும் அண்ணாத்த படம் ரஜினியை பெருமளவில் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினி தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா வீட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். மேலும் அங்கு அவருடன் சுமார் 3 மணி நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அதுமட்டுமின்றி இயக்குனர் சிவாவை பாராட்டி அவருக்கு தங்க செயின் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளாராம்.


Advertisement