வீடியோ: அந்த காமெடி சீன எப்படி மறக்க முடியும்!! ரஜினி முருகன் காமெடி நடிகர் திடீர் மரணம்!! வைரலாகும் அந்த காமெடி சீன்!!Rajini murugan movie fame actor paun raj no more

சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் தொடர் மரணம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் KV ஆனந்த் போன்றோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

Rajini murugan

இவரது மரணம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பவுன்ராஜ் ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழத்தைப் பறிக்க முயன்று  டீ ஸ்டாலையையே கவிழ்த்த காட்சி ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டது. இவர் உயிரிழந்த நிலையில் தற்போது அந்த வீடியோ காட்சி மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.