சினிமா

சென்னை திரும்பியதும் முதல் வேலையாக நடிகர் ரஜினி என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! அவரது மகள் வெளியிட்ட புகைப்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நடி

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் , சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட  பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த நிலையில் கடந்த சில காலங்களாக அண்ணாத்த படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. பின்னர் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து  ரஜினி ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தார்.

இதனை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட அவர் இன்று கொரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இத்தகைய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ரஜினியின் மகள் சவுந்தர்யா, நம்ம தலைவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெல்வோம். அனைவரும் மாஸ்க் அணியுங்கள், பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் என பதிவிட்டுள்ளார்.
 


Advertisement