அந்த கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன்.. நிச்சயம் பலிக்கும்.! நம்பிக்கையில் நடிகர் சூர்யா!!
ரஜினி நடித்ததில் அவருக்கே பிடிக்காத ஒரு படம் சூப்பர் ஹிட்டானது!.!என்ன படம் தெரியுமா.?
ரஜினி நடித்ததில் அவருக்கே பிடிக்காத ஒரு படம் சூப்பர் ஹிட்டானது!.!என்ன படம் தெரியுமா.?

1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" படத்தில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன்பிறகு 16 வயதினிலே, அலாவுதீனும் அற்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.
அந்த பின்னர் 1978ம் ஆண்டு "பைரவி' படத்தில் தான் ரஜினிகாந்த் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு இன்றுவரை கதாநாயகனாக இவர் நடித்து வரும் அனைத்துப் படங்களுமே சூப்பர், மெகா ஹிட்டாகவே அமைந்துள்ளன.
கோலிவுட்டின் அசைக்கமுடியாத சூப்பர்ஸ்டாராக இன்றுவரை இருக்கும் ரஜினி, 1993ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளியான "எஜமான்" படத்தில் மீனா, மனோரமா, நம்பியார், கவுண்டமணி, செந்தில், ஐஸ்வர்யா ஆகியோருடன் நடித்திருந்தார்.
மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம், ரஜினிக்கு பிடிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்தப்படத்தில் தான் ஏமாற்றப்படுவது போல் காட்சியமைப்பு இருப்பதை தன் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரஜனிகாந்த் கூறினாராம்.