அரசியல் இந்தியா சினிமா

கேரளாவுக்கு ரஜினிகாந்த் எவ்வளவு நிதியுதவி வழங்கியுள்ளார் தெரியுமா?

Summary:

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்துள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளதால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. 

kerala flood recent க்கான பட முடிவு

அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன. அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான உபரிநீர், தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. 

கடந்த 8-ந் தேதி முதல் கேரளாவில் பேரழிவை ஏற்படுத்தி உள்ள இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். 

kerala flood recent க்கான பட முடிவு

அனைத்து பகுதிகளிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். 

கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கேரளா முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். 


Advertisement