திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினி!! அவருக்கு என்னாச்சு.?

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினி!! அவருக்கு என்னாச்சு.?


rajini admitted in hospital

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு என்ன ஆயிற்று என ரஜினியின் ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்தநிலையில், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக தான் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது முழு உடல் பரிசோதனைக்காக ஒருநாள் மட்டும் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர், அவரது ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் நலமாக இருக்கின்றார், வதந்திகளை நம்பவேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.  ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை நடத்துவது வழக்கம். அந்தவகையில் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஜினி தற்போது நலமுடன் உள்ளார் எனவும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.