புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ப்பா.. கலக்குறாங்களே.! ஸ்டைலிஷ் தமிழச்சியான ராஜலட்சுமி.! முதன்முறையாக இங்கிலீஷில் பாடி வெளியிட்ட அசத்தல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர்கள் செந்தில்- ராஜலட்சுமி தம்பதியினர். அவர்கள் தங்களது அசத்தலான நாட்டுப்புற பாடல்களால் பட்டி தொட்டியெல்லாம் பெருமளவில் பிரபலமானார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று செந்தில் வெற்றியாளர் பட்டத்தையும் தட்டி சென்றார். தொடர்ந்து ராஜலட்சுமி மற்றும் செந்தில் இருவருக்கும் பல படங்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தது.
மேலும் இருவரும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும் செந்தில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இருளி என்ற படத்திலும், ராஜலட்சுமி லைசன்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடிக்கிறார்.
இவ்வாறு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கும் இந்த தம்பதியினர் சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றும் வைத்துள்ளார்களாம். இந்நிலையில் அவர்கள் அடிக்கடி பல பாடல்களை பாடி தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ராஜலட்சுமி ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பெயரில் ஆங்கிலத்தில் அசத்தலாக பாடல் ஒன்றை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.