சினிமா

திருமண கோலத்தில் விஜய் டிவி பிரபலங்கள்! கல்யாணம் ஆயிடுச்சா? அதிர்ச்சியான ரசிகர்கள்!

Summary:

Raja rani senba and karthik in bridel look

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஓன்று ராஜா ராணி. இதில் சென்பா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா மனசாவும், கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் குளிர் 100 % படத்தின் ஹீரோ சஞ்சய்யும் நடித்து வருகின்றனர். மக்கள் மத்தியில் இந்த தொடருக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. இந்த ஒரே தொடர் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார் ஆலியா.

இந்நிலையில் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்னதாகவே தனது நண்பர் ஒருவரை காதலித்து வந்த சென்பா, பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடிக்கும் கார்த்திகை காத்தலின்றார் சென்பா. இவர்கள் இருவர் பற்றிய செய்திகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கம்.


அந்த வகையில் சென்பா மற்றும் கார்த்தி இருவரும் ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக கனடா சென்றுள்ளனர். அங்கு இருவரும் திருமண கோலத்தில் மிகவும் அழகாக ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை  ஆலியா தனதுசமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு இருவரும் மணக்கோலத்தில் உள்ளது போலவே தோற்றமளிக்கின்றது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதா என கமெண்ட் செய்து வருகின்றனர்.


View this post on Instagram

Memories 🥰🥰🥰🥰🥰

A post shared by Alya Manasa (@alya_manasa) onView this post on Instagram

Happy evening 😘😘

A post shared by Alya Manasa (@alya_manasa) on


 


Advertisement