சினிமா

துறவி ஆகிறாரா பிக் பாஸ் புகழ் ரைசா - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Summary:

raisaa latest pic

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ரைசா. அதன்பின்னர் கடந்த ஆண்டு வெளியான 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரைசா மேலும் பிரபலமானார்.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் ரைசா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் துறவியாக இருக்கும் அந்த போட்டோவில் ஆசி வழங்குவது போல கைகளை வைத்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அவரிடம் சீடராக சேரவேண்டும் என ரசிகர்கள் கமெண்டில் செய்து வருகின்றனர். 

View this post on Instagram

Helo from Raizananda 👋🏼

A post shared by Raiza Wilson (@raizawilson) on


Advertisement