ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
வாவ்.. கியூட் ஸ்மைல்! மாடர்ன் உடையில் ரசிகர்களை மயங்க வைக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் தடையற தாக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, பின்னர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து என்னமோ ஏதோ என்ற படத்தில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களை பெருமளவில் கவரவில்லை.
பின் அவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அடிக்கடி கிளாமரான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போதும் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து கியூட் ஸ்மைலோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.