சினிமா

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில்.. ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல முன்னணி நடிகரின் தம்பி! அட..யாருன்னு பார்த்தீர்களா?

Summary:

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில்.. ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல முன்னணி நடிகரின் தம்பி! அட.. யாருன்னு பார்த்தீர்களா?

தமிழ் சினிமாவில் முன்னணி டாப் இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

கே.எஸ் ரவிக்குமார் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல டாப் நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவரது இயக்கத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த திரைப்படமும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் கே.எஸ் ரவிக்குமார் தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்படத்தில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


Advertisement