அடுத்த சந்திரமுகி யார்? சந்திரமுகி-2 குறித்து ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

அடுத்த சந்திரமுகி யார்? சந்திரமுகி-2 குறித்து ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!

பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திகில் திரைப்படம் சந்திரமுகி. இதில் ஜோதிகா நடித்த சந்திரமுகி வேடம் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில் தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தினை பி.வாசு உருவாக்கவுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

அதே சமயம் இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடமான சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் ஜோதிகா, சிமரன், கைரா அத்வானி இவர்களில் ஒருவர் தான் நடிக்க போகிறார் என்ற தகவல்கள் கசிந்து வந்தன. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சந்திரமுகி 2 படத்தில் முக்கிய வேடத்தில் ஜோதிகா, சிம்ரன், ஹைரா அத்வானி நடிப்பதாக பல போலி தகவல்கள் பரப்பப்படுகின்றன. படத்தின் கதை உருவாக்கும் வேலை நடந்து வருகிறது. இந்த கொரோனா நிலை நீங்கிய பிறகு கதாநாயகி குறித்து தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும், அதன்பிறகு அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்' என கூறியுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo