அரசியலுக்கு வருகிறாரா நடிகர் ராகவா லாரன்ஸ்? அதிரடியாக வெளியிட்ட திடீர் அறிக்கை! பாராட்டிதள்ளும் ரசிகர்கள்!

Ragava lawrance tweet about politics


ragava-lawrance-tweet-about-politics

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் நடன இயக்குனராக முன்னேறியவர் ராகவா லாரன்ஸ். இவர் பல முன்னணி நடிகர்களின் மெஹா ஹிட் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகராக களமிறங்கிய அவர் தனது திறமையான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளார். மேலும் தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டும்  விளங்குகிறார்.

அதுமட்டுமின்றி அவர் ஆதரவற்ற மற்றும் மாற்று திறனாளி குழந்தைகளுக்காக ஆசிரமம் தொடங்கி ஏராளமான உதவிகளை செய்து  வருகிறார். மேலும் வறுமையால் கஷ்டப்பட்டு வரும் பலருக்கும் தன்னால் இயன்ற அளவுக்கு அள்ளிக்கொடுத்து மனதார பல உதவிகளையும் செய்து வருகிறார். அதனைத் தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரப் போகிறாரா?  என பலரும் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 
நான் அரசியலுக்கு வந்து பதவியை பெற்று அதன் மூலமாக ஏழை மக்களுக்கு இது செய்வேன், அது செய்வேன் என வாக்கு கொடுத்து, நேரத்தை வீணடிப்பதை விட, அமைதியாகவே இருந்துகொண்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  இந்த சமுதாயத்திற்கு முடிந்த உதவிகளை செய்வதுதான் சிறந்தது என நான் நம்புகிறேன். நான் இதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ எனது 12 வருட உழைப்பு மற்றும் நம்பிக்கை. அவர்களது கனவு நிஜமாகி இருப்பதை நீங்களே பார்க்க முடியும். இந்த குழந்தையோடு சேர்த்து இன்னும்  200 குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வராமலும் என்னால் இதையெல்லாம் செய்ய முடியும். சேவை தான் கடவுள் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.