சினிமா

அவர் மேல நான் பைத்தியமா இருப்பேன்! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ராதிகா!

Summary:

Radhika talk about her husband

தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் அறிமுகமானார் நடிகை ராதிகா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலு‌ம் 80 களில் முன்னணி நடிகையாக  வலம் வந்தார். 

அதனை தொடர்ந்து அவர் தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சின்னத்திரையிலும் கொடிக்கட்டி பறந்தார். அவர் நடித்த சித்தி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி போன்ற சீரியல்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. 

இந்நிலையில் அவர் தற்போது தொகுப்பாளினியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதாவது பிரபல தொலைக்காட்சியான கலர்ஸ் டிவியில் கோடீஸ்வரி என்ற புதிய கேம் ஷோ ஒன்றை தொகுத்து வழங்கிவருகிறார்.  மேலும் அவர் நடிப்பில்  ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சித்தி தொடரின் இரண்டாம் பாகமும் தற்போது ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் நடிகை ராதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவரிடம் கணவர் சரத்குமார் பற்றி தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு  ராதிகா, சரத்குமார் என்றால் எனக்கு பைத்தியம் Im Mad about him என வெளிப்படையாக கூறியுள்ளார்.


Advertisement